பறவைகள் கூட்டத்தில் ஒரு அழகான பிங்க் டான்சர் பெண்… 21 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வெளிநாட்டுப் பறவையான ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டத்தில் ஒரு அழகான பிங்க் டான்சர் பெண் மறைந்திருக்கிறார். அந்த பிங்க் டான்சரை 21 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையிலேயே நமது கண்களைக் கவரும் விதமாக உள்ளது. அதற்கு காரணம் ஃபிளமிங்கோ பறவைகளின் பிங்க் கலர் தான் முக்கியக் காரணம்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் வைரலாகி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வெளிநாட்டில் அதிக அளவில் காணப்படும் ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டமாக இருக்கிறது. அவைகளுக்கு இடையெ ஒரு அழகான பிங்க் டான்சர் பெண் மறைந்திருக்கிறார். பிங்க் டான்சரை 21 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர் நீங்க. ஏனென்றால், அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானைகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விட்டாலே நெட்டிசன்கள் வெறித்தனமாக விடையைத் தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமாக இருப்பதோடு ரிலாக்ஸ் செய்யவும் வைக்கிறது. அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது.
‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகள் ஐரோப்பாவில் அதிகம் காணப்படும் அழகான பறவை இனம். இதை தமிழில் பெரும் பூநாரை என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த படத்தில் கண்ணைக் கவரும் வகையில், ‘பிங்க்’ நிற ஃபிளெமிங்கோ பறவைகள் கூட்டமாக இருக்கிறது. அவற்றுக்கு மத்தியில் ஒரு அழகான‘பிங்க்’ நிற டான்சர் பெண் இருக்கிறாள். அந்த பிங்க் டான்சரை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவாலாக விடப்படுகிறது.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் பிங்க் டான்சர் பெண்ணை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 21 நொடிகளுக்குள் பிங்க் டான்சர் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் பிங்க் டான்சரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஃபிளெமிங்கோ பறவைகளுக்கு இடையே பிங்க் டான்சர் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் கீழ்ப் பகுதியில் நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் அந்த அழகான பிங்க் டான்சர் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பிங்க் டான்சர் எங்கே இருக்கிறாள் என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”