Advertisment

இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கு? கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் சேலஞ்ச், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மயக்கும், மூளையைக் குழப்பும் ஆனால், உங்கள் தேடும் திறனை அதிகரிக்கும், புதிர்களை விடுவிப்பதில் உங்களை நிபுணத்துவமிக்கவராக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவாலை ஏற்று, இதில் எத்தனை விலங்குகள் கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடிதான். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கின்றன என்று 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், உங்கள் கூர்மையான பார்வைத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று டிக்டாக் பயனர் ராணா அர்ஷத் இந்த சவாலை விடுத்துள்ளார்.

“நன்றாக உற்றுப் பாருங்கள், ஏனென்றால் இது ஒருவித தந்திர விளையாட்டு. உங்களுக்கு எத்தனை விலங்குகள் தெரிந்தது என்று கம்மெண்ட்டில் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களில் சிலர் இந்த படத்தில் 5 விலங்குகள் இருக்கிறது என்றும் சிலர் 8 விலங்குகள் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்கள்.

பல பார்வையாளர்கள் கரடி, வௌவால், குரங்கு, நாய் மற்றும் பூனை ஆகியவை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சிலர் பூனையின் பின்னால் அணில் அதன் வாலில் இருக்கிறது என்று கூறுகின்றனர். சிலர் அது முயலாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

இந்த படத்தில் மொத்தம் எத்தனை விலங்குகள்தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ விடை தருகிறோம்.

publive-image

இந்த படத்தில் மொத்தம் 6 விலங்குகள் இருக்கின்றன. கரடி, வௌவால், குரங்கு, நாய், பூனை, அனில் ஆகிய விலங்குகள் இருக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment