Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயா ஜாலங்களை நம் கண்முன்னே நடத்துகின்றன. தோற்ற மயக்கமா? அல்லது காட்சிப் பிழையா என்று முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஒரே கேன்வாசில் வெவ்வேறு உருவங்களை மறைத்து மாயாஜாலம் செய்யப்படுகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு கறுப்பு வெள்ளை படத்தில் 10 விலங்குகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். இந்த படத்தில் உள்ள 10 விலங்குகளையும் இதுவரை 10% பேர் மட்டும்தான் கண்டுபிடித்துள்ளார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படத்தில் மறைந்திருக்கும் 10 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
இந்த படத்தில் மொத்தம் 10 விலங்குகள் இருக்கிறது இல்லையா, அந்த 10 விலங்குகளின் பெயர்களைக் கூறுகிறோம். அதை வைத்து அந்த விலங்குகள் எங்கே தெரிகிறது என்று பாருங்கள்.
1 முதலை
2 மான்
3 யானை
4 கிளி
5 குதிரை
6 வாத்து
7 எருது
8 நரி
9 சேவல்
10 புகைப்பிடிக்கும் மனிதன் – என 10 உயிரினங்கள் இருக்கிறது.
இப்போது மீண்டும் இந்த படத்தைப் பார்த்து இந்த விலங்குகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எந்தெந்த விலங்குகள் எங்கே இருக்கிறது என்று விடையை இங்கே தருகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”