Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது உண்மைகளுக்கு இடையே பொய்யைக் கண்டுபிடிப்பது போன்றது. அசல்களுக்கு இடையே நகலைக் கண்டுபிடிப்பது போன்றது. இது எளிதானது. ஆனால், சில நேரங்கள் அசல் நகல்களைப் போல தோண்றும்போது தோற்ற மயக்கத்தில் புரியாமல் குழம்பிப் போகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டத்தில் சிக்கி எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் மிகவும் புத்திசாலி. நீங்கள் புத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரே மாதிரியான தோற்றம் உடைய விலங்குகளுக்கு இடையே உள்ள குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. பொதுவாக உயிரினங்கள் எல்லாமே பரிணாம வளர்ச்சியில் உருவானவை என்பதால் ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்கவே செய்யும். யானை, காட்டெருமை, காண்டாமிருகம், உருவத்தில் பெரிய விலங்குகள். 3 விலங்குகளும் ஒன்றாக இருக்கும்போது தொலைவில் இருந்து சரியாகக் வேறுபடுத்தி அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் கூட்டமாக ஒரு குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு கரையேறுகின்றன. யானைகளுக்கு இடையே, ஒரு காட்டு எருமை சிக்கிக் கொண்டது. ஆனால், இரண்டி தோலும் ஒரே மாதிரியாக இருப்பதால் அடையாளம் காண முடியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால், இந்த படத்தில் யானைக் கூட்டத்திற்கு இடையே சிக்கிய எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மிகவும் புத்திசாலி.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டத்தில் சிக்கிய எருமையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மிகவும் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் எருமையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் எருமையே இல்லை என்று பொறுமை இல்லாமல் கூறுகிறார்கள். எருமையக்க் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் மத்தியில் பொறுமையாகப் பார்த்து கவனமாகத் தேடுங்கள் எருமையைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது இந்த படத்தில் உள்ள யானைக் கூட்டத்தில் சிக்கிய எருமையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, எருமை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.