/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-17.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. முதல் பார்வையில் சவால் எளிமையாக தெரியும், விடை தேடத் தொடங்கினால் கடினமாக, உற்று நோக்கினால் உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடினால் மூளையைக் குழப்பும், இன்னும் தீவிரமாகத் தேடினால் உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். அய்யோ முடியல என்று நீங்கள் வடிவேலு பாணியில் நினைக்கும்போது முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் வேலை நெருக்கடி எல்லாவற்றையும் இந்த ஆப்டிகள் இல்யூஷன் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகள் அபேஸ் செய்துவிடும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்துவருகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-17-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் முழுவதும் லாப்ஸ்டர்கள் கும்பலாக கொசகொசவென குவிந்திருக்கிறது. அவற்றில் மறைந்திருக்கும் 4 சிவப்பு நண்டுகளை 21 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க செம ஷார்ப்தான். ஏனென்றால், லாப்ஸ்டர்களும் நண்டுகளும் ஒரே மாதிரியாக இருப்பதால், அதில் நண்டுகளை மட்டும் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுது போக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-18T153445.775.jpg)
இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை, ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்துள்ளார். அவர் இந்த படத்தை தனது பிளாகி வெளிட்டுள்ளார். கடலின் அடி ஆழத்தில் இருப்பதைப் போல இந்த படத்தை வரைந்துள்ளார். கடலின் அடியில் லாப்ஸ்டர்கள் கும்பலாக குவிந்திருக்கிறது. அவற்றுக்கு நடுவே 4 சிவப்பு நண்டுகள் ஊடுருவி மறைந்திருக்கிறது. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். நீங்கள் அந்த 4 நண்டுகளையும் 21 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.
இந்நேரம் நீங்கள் அந்த 4 நண்டுகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான். உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் அந்த 4 நண்டுகளையும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய 4 நண்டுகளும் எங்கே மறைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-18T153657.725.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.