New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/11/wqxJvvf3qD69eRDCpJQK.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்: இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் மறைந்திருக்கும் உடும்பை உங்களால் 10 விநாடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
சமீபத்திய நாட்களில் சமூக வலைதளங்களில் "ஆப்டிகல் இல்யூஷன்" என்ற விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. முன்பு பத்திரிகைகளில் புதிர்களாக வந்த இந்த விளையாட்டுகளுக்கு, டிஜிட்டல் உலகில் "ஆப்டிகல் இல்யூஷன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை விளையாடுவதன் மூலம் நமது புத்தி கூர்மையை சோதிக்க முடிவதுடன், மனதிற்கு அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பலவிதமான வடிவங்களில் வருகின்றன. ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு பொருள் மறைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, விலங்குகள், பறவைகள் அல்லது ஏதாவது ஒரு எழுத்தாக இருக்கலாம். நாம் எவ்வளவு விரைவாக அவற்றைக் கண்டுபிடிக்கிறோமோ, அந்த அளவிற்கு நமது மூளை கூர்மையாக செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற சவால்கள் நமது பொழுதுபோக்கிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஏனென்றால், செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே அதிகமாகிவிட்டது. அப்படி பயன்படுத்தும் செல்போனை, இது போன்ற விஷயங்களுக்காக நாம் உபயோகப்படுத்தினால், அவை நம் புத்தியை கூர்மையாக்குவதற்கு உதவியாக இருக்கும்.
மேலும், ஆப்டிகல் இல்யூஷன் நம்முடைய பார்வை மற்றும் மூளையின் செயல்பாடுகள் எவ்வளவு சிக்கலானவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், நம்முடைய பார்க்கும் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் உதவுகின்றன.
அதனடிப்படையில், மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒரு உடும்பு மறைந்துள்ளது. அப்படத்தை பார்த்ததும் சுமார் 10 விநாடிகளில் உடும்பை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உண்மையிலேயே நீங்கள் கில்லாடி தான். உங்களுடைய பார்வைத் திறன் கூர்மையாக இருக்கிறது என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எனினும், சிலருக்கு இதனை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். அவர்கள் வருத்தப்பட தேவையில்லை. அப்படத்தில் உடும்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டுக் காண்பித்திருக்கிறோம். எனவே, இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை அடிக்கடி மேற்கொள்ளும் போது, உங்களாலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.