![Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Hyena-I.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு தீர்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு முன், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏறு விடை கண்டுபிடியுங்கள் பிறகு, உங்களுக்கே தெரியும்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Hyena-I-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை கழுதைப்புலிகள் இருக்கிறது என்று 15 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து கூறினால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில் கழுதைப் புலிகளைக் கண்டுபிடித்துக் கூறுவது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களில் அப்படி என்ன இருக்கிறது என்றால், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியம் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கேட்கப்படுகிறது.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Hyena-II.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், நீங்கள் தேடிக் கொண்டிருக்கும்போது மின்னல் அடித்தது போல, தோன்றி மறையும். எங்கே இருக்கிறது என திணறி நிற்கும்போது உங்கள் மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். எப்படியோ இறுதியில் விடை கண்டுபிடிக்கும்போது, ஆர்க்கிமிடீஸ் யுரேகா, யுரேகா என்று கூச்சலிட்டதைப் போல, நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். தேடல், தவறவிடுதல், குழப்பம், த்ரில்லிங், உற்சாகம் என அனைத்து உணர்வுகளும் கலவையாக அனுபவிப்பீர்கள். ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் இதைவிட வேறு என்ன வேண்டும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் புதர்கள் மண்டிய ஒரு நீரோடையில், கழுதைப்புலிகள் மறைந்திருக்கின்றன. அப்படி, இந்த படத்தில் மொத்தம் எத்தனை கழுதைப்புலிகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில் கழுதைப்புலிகளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் கண்டுபிடித்தால் நீங்களும் கெட்டிக்காரர்தான்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை கழுதைப்புலிகள் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Hyena-II-1.jpg)
ஆனால், பலரும் இந்த படத்தில் 1 கழுதைப்புலிதான் இருக்கிறது என்று கூறி -அடித்து சத்தியம் செய்கிறார்கள். சிலர் 2 கழுதைப்புலிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், கெட்டிக்காரர்கள் 3 கழுதைப்புலிகளை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் இந்த படத்தில் எத்தனை கழுதைப்புலி இருக்கிறது. எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 கழுதைப்புலிகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். நீங்கள் கண்டுபிடித்ததை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Hyena-III.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.