Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கணினியில் வேலை நெருக்கடியால சோர்ந்துபோய் இருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. ஒரு படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது பொருட்களைக் கண்டுபிடிப்பதில் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சவால் விடப்படும் புதிர்கள் என்பது மனிதர்கள் பொதுவாக ஒரு படத்தை எப்படிப் பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதனால், நீங்கள் யோசிக்கவே முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்படும். அப்படியே வெளிப்படையாக வைத்தாலும், அதைப் போன்ற உருவ ஒற்றுமையுள்ள பொருட்களுக்கு இடையே மறைத்து வைத்து பார்ப்பவர்களைக் குழப்பமடையச் செய்யும் விதமாக இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கதான் மாஸ்டர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிய விஷயம் அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பண்டைய கிரேக்க - ரோமானியர் காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளனர். கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நின்று கொண்டிருக்கிற இடம் நகர்வதை ஆப்டிகல் இல்யூஷன் என்றார். ஆப்டிகல் இல்யூஷன் என்றால் வேறு ஒன்றுமில்லை, அது ஒரு தோற்ற மயக்கம்.
இந்திய மரபில், பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் தன்மையைக் கொண்டுள்ளன. கோயில்களில் இடம் பெற்றுள்ள யாளி சிற்பம்கூட ஆப்டிகல் இல்யூஷன் வடிவம் என்று கருதலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் படம்பிடிக்கப்பட்டது. இந்து சிங்கத்தின் கூண்டு. இந்த படத்தில் எத்தனை சிங்கங்கள் இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விடை கண்டுபிடிப்பதில் மாஸ்டர் நீங்கள்தான். ஏனென்றால், இது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
இந்நேரம் நீங்கள் எத்தனை சிங்கம் இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் ஒரு சிங்கம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் 2 சிங்கங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் எத்தனை சிங்கங்களை கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள். ஒன்றா இரண்டா? நீங்கள் கண்டுபிடித்த சிங்கங்களின் எண்ணிக்கை சரி பார்க்க இதோ விடை தருகிறோம்.
இந்த படத்தில் 2 சிங்கங்கள் இருக்கிறது. அதில் ஒரு சிங்கம் உண்மையான சிங்கம். மற்றொன்று எச்சரிக்கை பலகையில் வரையப்பட்ட சிங்கம் உங்களுக்காக 2 சிங்கங்களையும் வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டராகுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.