Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். வெறித்தனமாக விடையைக் கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள சுவாரசியம்தான். அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என்று சரியாகக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. ஆனால், அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பார்த்தால் அது விளையாட்டாக மட்டுமே தெரியும். ஆனால், அதை ஒரு தத்துவக் கோணத்திலும் பார்க்கலாம்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகள் கவிஞர் மருதகாசி எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் மட்டுமே ஆப்டிகல் இல்யூஷனில் எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஐஇ தமிழ் தளத்தில் வெளியாகிறது. இந்த படம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, மான், யானை, ஒட்டகச்சிவிங்கி நீர் யானை, முதலை என பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த உயிரியல் பூங்காவில் தினமும் விலங்குகளைப் பார்க்க நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை இயற்கையான சூழ்நிலையில், பெரிய கூண்டு அமைத்து அதில் பராமரித்து வருகிறார்கள். இந்த படத்தில் உள்ள பெரிய கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். ஆனால், அதற்கு கொஞ்சம் கூர்மையாகப் பார்க்க வேண்டும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள கூண்டுக்குள் எத்தனை புலிகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் ஒரு புலிதான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், புத்திசாலிகள் புலிகளை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் கூண்டுக்குள் ஒரு புலிதான் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 2 புலிகள் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலரோ எத்தனை புலிகள்தான் இருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என்று கூறுகிறோம். கூண்டுக்குள் மொத்தம் 3 புலிகள் இருக்கிறது. அதில், 1 வங்கப் புலி, மற்ற 2 புலிகளும் வெள்ளைப் புலிகள். கூண்டுக்குள் 3 புலிகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“