Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விலங்குகளுக்கு இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சிகளை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் மீண்டும் சிறுவர்களாக மாறலாம். உங்களுக்கு மீண்டும் சிறுவர்களாக மாற ஆசையா? அப்போ இந்த படத்துல பட்டாம்பூச்சிகளைப் பிடிங்க.
ஆப்டிகல் இல்யூஷன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயது நெட்டிசன்களும் உற்சாகம் அடைந்து அதில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஏதோ ஒரு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வையை திசைத் திருப்பும் ஒரு மாயாஜாலம். உங்களை கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைக் கண்டுபிடித்தால் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விலங்குகள் பறவைகள் இருக்கின்றன. அதே நேரத்தில், 3 பட்டாம்பூச்சிகளும் இருக்கிறது. 90-ஸ் கிட்ஸைக் கேட்டுப் பாருங்கள். பட்டாம்பூச்சி பிடிப்பது, தும்பி பிடிப்பது எல்லாம் எவ்வளவு சந்தோஷமானது என்று. உங்களுக்கு மீண்டும் சிறுவர்களாக மாற ஒரு வாய்ப்பு. இந்த படத்தில் விலங்குகள் இடையே இருக்கும் 3 பட்டாம்பூச்சிகளைக் 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் மூலமாக உங்கள் பால்ய நினைவுகளுக்குத் திரும்பி நீங்கள் மீண்டும் சின்ன பசங்களாக மாறலாம். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் 3 பட்டாம்பூச்சிகள் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் பால்ய நினைவுகள் திரும்ப வந்திருக்கலாம். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பட்டாம்பூச்சிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 3 பட்டாம்பூச்சிகளும் எங்கே இருக்கிறது வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.