உங்க ஷார்ப் பார்வைக்கு சேலஞ்: '999' நம்பர் இருக்குற இடத்தை 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லாடி

Optical illusion: இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கும் '999' எண்ணை 7 விநாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

Optical illusion: இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருக்கும் '999' எண்ணை 7 விநாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
999

Optical illusion: நம்முடைய கண்கள் பார்க்கும் காட்சிகளை மூளை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். சில சமயங்களில் நாம் பார்ப்பது, உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாகத் தோன்றலாம். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் என்று அழைக்கப்படுகிறது. 

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் என்பது நாம் பார்க்கும் ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய தவறான அல்லது திரித்து உணரப்படும் கருத்து ஆகும். இது நம்முடைய கண்கள் மற்றும் மூளை இணைந்து செயல்படும் விதத்தில் ஏற்படும் ஒருவிதமான "குழப்பம்" என்று சொல்லலாம். உண்மையில் அங்கு இல்லாத ஒன்றை இருப்பதாகவோ, அல்லது இருப்பதை வேறு விதமாகவோ நாம் உணர வைப்பதே இந்த ஆப்டிகல் இல்யூஷனின் சிறப்பு.

ஆப்டிகல் இல்யூஷன் நம்முடைய பார்வை மற்றும் மூளையின் செயல்பாடுகள் எவ்வளவு சிக்கலானவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அவை நம்மை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், நம்முடைய பார்க்கும் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. 

 

Advertisment
Advertisements

999 1

 

அதன்படி, மேலே இருக்கும் புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் எண்களில் '999' எங்கு இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக, 7 விநாடிகளில் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் கில்லாடி தான்.

 

999 2

 

எனினும், உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வருத்தப்பட தேவையில்லை. '999' எந்த வரிசையில் இருக்கிறது என்று நாங்களே வட்டமிட்டுக் காண்பித்துள்ளோம். இது போன்று தொடர்ச்சியாக  ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆராய்ந்து பயிற்சி பெறுவதன் மூலம் உங்களது கவனிக்கும் திறனை மேம்படுத்த முடியும்.

optical illision

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: