Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவராசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக நெட்டிசன்களை காந்தப் போல ஈர்த்து வைரலாகி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் புதிர் விளையாட்டுகளாக மட்டுமல்லாமல் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையையும் குறிப்பிடுகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது. 1880களில் வெளியான இந்த கரடி ஓவியத்தில், மறைந்துள மனிதனின் முகத்தைக் கண்டுபிடித்து இந்த கரடியின் மாஸ்டர் யார் என்று 20 வினாடிகளில் சொல்ல வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் மாஸ்டர்.
1880களில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடிய சுவாரசியமான படம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனோ பகுப்பாய்வுத் துறையில் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ஏனெனில், இந்த படங்களை நீங்கள் விஷயங்களை எப்படி உணருகிறீர்கள் என்பதில் சில வெளிச்சங்களை வீசுகின்றன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் அல்லது படங்களைப் பார்க்க முடியும்.
அந்த வகையில், 1880 களில் உருவாகப்பட்ட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடியின் ஓவியத்தில் மனிதனின் முகத்தைப் பார்க்கலாம்.
‘எனது மாஸ்டர் எங்கே?’ என்று கேட்கும் ஒரு தந்திரமான புதிராக இந்த படம் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கரடியின் ஓவியத்தில் ஒரு மனிதனின் முகம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த மனிதனின் முகத்தைக் 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். ஏனென்றால், அந்த முகம்தான், கரடியின் மாஸ்டர். கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் மாஸ்டர் பாராட்டுகள்.
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
அதற்கு முன்னர், இந்த படத்தை உன்னிப்பாகப் பார்த்து, கரடியின் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனின் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். மனிதனின் முகத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகத் தோன்றலாம். ஆனால், உங்கள் தலையை சிறிது வலது பக்கம் சாய்த்துப்பார்த்தால், மனித முகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஏனென்றால், கரடியின் மாஸ்டர் யார் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். மேலும், மனிதனின் முகம், கரடியின் இடது காதுக்குக் கீழே இருக்கிறது. அந்த முகம்தான் கரடியின் மாஸ்டர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“