Body: Optical Illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், ஒரு பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மூளைக்கு கண்ணுக்கு வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக இருக்கிறது. அதனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறியுள்ளது.
மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்துபவை இல்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. காட்டில் நரிகள் கூட்டமாக இருக்கும் இந்த ஓவியத்தில் ஒரு நீல நிற கண்கள் உடைய நரி இருக்கிறது. அது எந்த நரி என 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சவால். கண்டுபிடிங்க பார்க்கலாம்.
நீலக் கண்களை உடைய நரியைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவ்வளவு எளிதல்ல. புக் அன் ஐ டெஸ் (Book An Eye Test) வெளியிட்டுள இந்த சவாலான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய நரிகள் இருக்கிறது. இதில் நீல நிறக் கண்களையுடைய நரியை 20 நொடிகளில் கண்டுபிடிப்பது என்பது உண்மையிலேயே மிகவும் சவாலான ஒன்று.
நீங்கள் 20 நொடிகளில் நீலக் கண்களை உடைய நரியைக் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
இதோ உங்களுகாக ஒரு குறிப்பைத் தருகிறோம். நீலக் கண்களை உடைய நரி இந்த படத்தில் இடது பக்கம் இருக்கிறது. இப்போது தேடிப் பாருங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இதோ உங்களுக்காக நீலக் கண் நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“