New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/cat.jpg)
ஆப்டிக்கல் இல்யூஷன்; இந்த படத்தில் தெரியும் பூனையை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்
Optical illusion: can you spot the cat within 20 seconds viral photo: சமீபகாலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் அல்லது ஒளியியல் மாயை தொடர்பான புதிர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புதிர்களின் முடிச்சுகளை அவிழ்ப்பது நமக்கு சிறந்த ஆர்வமூட்டும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் உங்கள் ஆளுமை மற்றும் புத்திச்சாலித்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களுக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மரக் குவியல்களுக்குள் ஒரு பூனையை கண்டுபிடிக்க சொல்கிறது, அதுவும் 20 வினாடிக்குள் கண்டுபிடிக்க பார்வையாளர்களை சவால் செய்கிறது. சிலர் பூனையை உடனடியாக கண்டுபிடிக்கலாம், மற்றவர்கள் சிறிது நேரம் தங்கள் மூளையை கீறலாம்.
இதையும் படியுங்கள்: இந்த படத்துல ஈராறு பன்னிரு முகங்களை கண்டுபிடிச்சா… ஐக்யூவில் டாப் திருமுகம் நீங்கதான்!
இந்த ஒளியியல் மாயைக்கான பதிலை பலரால் கண்டுபிடிக்க முடியாததால், மரக் குவியல்களுக்கு இடையில் உருமறைப்பு பூனையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இந்த ஒளியியல் மாயை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
படத்தில் நீங்கள் பார்க்கும்போது, பூனையை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. பெரும்பாலான பயனர்களால் ஒரு பெரிய டிரக், காலி இடங்கள் மற்றும் மரக் குவியல்களைத் தவிர வேறு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். நீங்கள் படத்தை உன்னிப்பாகப் பார்த்தால், படத்தின் நடு வலது மூலையில் ஒரு தடிமனான மரத்தைச் சுற்றி பூனைக்குட்டிகள் பதுங்கியிருப்பதைக் காணலாம். படத்தில் பூனைக்குட்டிகளைச் சுற்றி சிவப்பு வட்டம் போட்டுள்ளோம்.
இந்த ஒளியியல் மாயை பார்க்கும் பெரும்பாலானவர்களின் கருத்து பூனையை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான். சிலர் நீண்ட நேரம் தேவைப்பட்டதாகவும், ஆனால் ஆர்வமூட்டும் விதமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் ஆப்டிகல் மாயைகள் வேண்டுமென்றே கடினமாக இருக்கும், இது அவ்வாறானதாக இருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.