Optical Illusion Tamil News: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்கள் நிறைந்த மரம் ஒன்று உள்ளது. அதில் ஒரு கம்பளிப்பூச்சி ஜாலியாக படுத்து கொண்டு எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. அதனை 6 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று பாருங்கள்.
நுணுக்கமான நுண்ணறிவு கொண்ட நபர்கள் கம்பளிப்பூச்சியை எளிதில் கண்டுபிடிக்க முடியும். படத்தை கவனமாக ஆராய்ந்து பாருங்கள்.
படத்தில் கம்பளிப்பூச்சி மரத்துடன் மிகவும் கச்சிதமாக ஒளிந்து கொண்டிருக்கிறது. முதல் பார்வையில் அதைக் கண்டுபிடிப்பதில் பலரும் சிரமப்படுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.
6 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?
கம்பளிப்பூச்சியைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? இல்லையா!
இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஏற்கனவே பார்த்த சிலர் கம்பளிப்பூச்சியை கவனித்திருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இல்லையென்றால், இங்கே தீர்வைப் பார்க்கலாம்.
நீங்கள் தேடும் கம்பளிப்பூச்சி படத்தின் இடது பக்கத்தில், பழங்களின் கொத்துகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இங்கே வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.