Advertisment

அடர்ந்த மரங்களுக்கு இடையே கொடிய விஷ பாம்பு… உங்க கண்ணுல பட்டா நீங்கதான் கில்லாடி!

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் கொடிய விஷ பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion: Can You Spot The Deadly Snake In The Trees? In tamil

இந்தப் படத்தை சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, பாம்பைக் கண்டுபிடிக்கும்படி தங்களைப் பின்தொடர்பவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

Optical Illusion Tamil News: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் கொடிய விஷ பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியுமா?

பாம்பு இரையைத் தேடும் போது புதர்கள் மற்றும் மரங்களுடன் தடையின்றி கலக்கிறது. இந்தப் படத்தை சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, பாம்பைக் கண்டுபிடிக்கும்படி தங்களைப் பின்தொடர்பவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

publive-image

"ஸ்பாட் தி ஸ்னேக் சண்டே இஸ் பேக்! அனைவருக்கும் பிடித்த மற்றும் சில சமயங்களில் ஏமாற்றமளிக்கும் விளையாட்டு மீண்டும் வந்து, நீங்கள் விளையாட தயாராக உள்ளது. இது மிகவும் எளிதானது என்று நான் நினைக்கிறேன்…" என்று அந்த பதிவின் கேப்சனில் போடப்பட்டு இருந்தது.

"நீங்கள் விளையாடுவது சரியா?, அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால் அது கண்ணுக்குத் தெரியாத பாம்பாக இருக்க வேண்டும்" என்று பயனர் ஒருவர் அந்த பதிவுக்கு கமெண்ட் செய்து இருந்தார்.

ஆனால் நீங்கள் சற்று உற்று நோக்கினால், படத்தின் மேல் இடது மூலையில் உள்ள மரக்கிளையில் கொடிய விஷ பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Viral Social Media Viral Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment