scorecardresearch

புலிகளுக்கு இடையே 4 பூனைகள்… 40 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் புலி!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். ஆனால், கொஞ்சம் நிதானமாகவும் ஸ்மார்ட்டாகவும் தேடினால் உடனடியாகக் கண்டுபிடித்துவிடலாம்.

Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களில் ஒரு சூறாவளி போல வீசி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடும் சவால்கள், கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற நல்ல பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை 40 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் நிஜமாகவே ஆப்டிகல் இல்யுஷன் புதிர்களைத் தீர்ப்பதில் புலிதான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை முடிவில்லா குழப்பத்தில் ஆழ்த்தும், முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்துள்ளார். புலிகளை சிந்திரங்களாக வரைந்துள்ளார். அதில் 4 பூனைகளை மறைத்துவைத்து கண்ணாமூச்சி காட்டியுள்ளார். புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.

புலிகளும் பூனைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரியும். விலங்கியல் அடிப்படையில், புலிகள் பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால்தான், பூனைகளும் புலிகளும் தோற்றத்தில் ஒத்திருக்கின்றன. இதை வைத்து ஜெர்ஜ்லி டுடால்ஃப் பார்வையாளர்களுக்கு ஒரு புதிர் போட்டு விளையாடியிருக்கிறார். உண்மையில், புலிகளுக்கு இடையே 4 பூனைகளை 40 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே நீங்க புலிதான்.

புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 பூனைகளை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாரட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை நன்றாக நிதானமாகத் தேடுங்கள்.

உங்களால் 4 பூனைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக இங்கே விடை தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the four cats among the tigers