Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் பார்ப்பதற்கு ஈஸியாக இருக்கும். அப்புறம், நீங்கள் பார்க்கப் பார்க்க ஆகிடுவிங்க குஷி. அந்த அளவுக்கு அதன் சுவாரசியத்தில் ஈர்க்கப்பட்டு அடிக்ஷனாகி கொண்டாடத் தொடங்கிவிடுவீர்கள்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே மிளகைத் தேடுவதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் புதிர் மிகவும் சுவாரசியமானது. லாப்ஸ்டர்களுக்கு இடையே 4 நண்டுகள் மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடித்தால் நிஜமாகவே புதிர்களை விடுவிப்பதில் நீங்க வேற லெவல் பாஸ். ஏனென்றால், கடல் வாழ் உயிரினங்களான லாப்ஸ்டர்களும் நண்டுகளும் இந்த படத்தில் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால், அவற்றில் நண்டுகளை கண்டுபிடிப்பது என்பது சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை ஹங்கேரியாவைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப் தனது வளைதளத்தில் வெளியிட்டுள்ளார். லாப்ஸ்டர்களை வரைந்து அவற்றுக்கு இடையே 4 நண்டுகளை மறைத்து வைத்து அவற்றை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளார்.
இந்த படத்தில் நீங்கள் லாப்ஸ்டர்களுக்கு இடையே மறைந்திருக்கும் 4 நண்டுகளைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
லாப்ஸ்டர்கள் நடுவே நண்டுகள் சற்று குண்டாக இருக்கும் பாருங்கள்…. படத்தின் இடது பக்கத்திலும் இடது பக்கத்திலும் கீழ்ப் பகுதியிலும் பாருங்கள். அதிலும் கடல் தாவரங்களுக்கு அருகே பாருங்கள் நண்டுகளை ஈசியாக பிடித்துவிடலாம். படத்தை நன்றாக உற்று கவனித்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நல்லது. கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நிச்சயமாக ஓவியர் டுடால்ஃபைத்தான் பாராட்ட வேண்டும். 4 நண்டுகளும் எங்கே மறைந்திருக்கிறது என்று உங்களுக்கு படம்பிடித்து காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”