Optical Illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 19 ஒட்டகச் சிவிங்கிகள் உள்ளன. இதில் எல்லாமே இரட்டை ஒட்டகச்சிவிங்கிகள். ஆனால், இதில் ஒன்று மட்டும தனி ஒட்டகச்சிவிங்கி. அது எங்கே இருக்கு சரியா கண்டுபிடிங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அந்த வகையில், சுவாரசியமானது.

இன்று மூளைக்கு வேலை தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 19 கார்ட்டூன் ஒட்டகச்சிவிங்கிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு ஒட்டகச் சிவிங்கி மட்டும் தனியானது. மற்றவை எல்லாம் இரட்டை ஒட்டகச் சிவிங்கிகள். இதில் தனி ஒட்டகச்சிவிங்கி எதுவென கண்டுபிடிக்க வேண்டும்.
ஒரு ஒட்டகச்சிவிங்கி மரத்தடியில் நிற்கிறது – மற்றொன்று பட்டாம்பூச்சியுடன் நட்பு கொள்கிறது. நீண்ட கழுத்து கொண்ட சில ஒட்டகச்சிவிங்கிகள் ஒன்றையொன்று எதிர்நோக்கி நிற்கின்றன. இருப்பினும், சில ஒட்டகச்சிவிங்கிகள் இலைகளை மேய்ந்துகொண்டிருக்கின்றன. சில சும்மா இருக்கின்றன.
இதில் எப்படி தனி ஒட்டகச் சிவிங்கியைக் கண்டுபிடிப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? தனி ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்கு உதவுவதற்காக சில குறிப்புகளைத் தருகிறோம்.
அனைத்து ஒட்டகச்சிவிங்கியின் கண்களைப் பாருங்கள். அதில் உள்ள வேறுபாட்டை வைத்து தனி ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடிக்கலாம்.
அடுத்தது, இரட்டையர்கள் அல்லாத தனி ஒட்டகச்சிவிங்கி இந்த புகைப்படத்தின் வலது பக்கத்தில் மூன்றாவது வரிசையில், இடதுபுறத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மிகவும் குழப்பமாக இருக்கிறதா? உங்களுக்கான விடையை கீழே படத்தில் வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“