Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் வெறும் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமில்லாமல், சில படங்கள் உங்கள் ஐக்யூ லெவலையும் காட்டுகிறது. அந்த வகையில் இந்த படத்துல ஈராறு பன்னிரு முகங்களை 35 நொடிகளில் கண்டுபிடித்தால் ஐக்யூவில் நீங்கள்தான் டாப் திருமுகம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் விடுக்கும் சவால்கள் சுவாரசியமாக இருப்பதால், நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடை கண்டுபிடித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளும் மரங்களும் ஓடைகளும் இருக்கிறது. இதில் பாறைகளில் மரங்களில் மனித முகங்களின் தோற்றம் இருக்கிறது. அப்படி மொத்தம் 13 முகங்கள் இருக்கிறது. அதில், ஈராறு பன்னிரு முகங்களைக் கண்டுபிடித்தால், ஐக்யூவில் நீங்கள்தான் டாப் திருமுகம். 13 முகங்களையும் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் ஐக்யூ லெவல் சூப்பர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அதிகப் படியான முகங்களைக் கண்டுபிடித்து உங்கள் ஐக்யூ லெவலைத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எத்தனை முகங்களைக் கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.
இந்த படத்தில் 35 வினாடிகளில் ஈராறு பன்னிரு முகங்களையும் கண்டுபிடித்து நீங்கதான் ஐக்யூவில் டாப் திருமுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய மனித முகங்கள் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஐக்யூ லெவலைத் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கடினமானதுதான். ஏனென்றால், இது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. கண்ணாடிகளுக்கு மத்தியில் வைரத்தைத் தேடுவதைப் போன்றது. மேகங்களுக்கு இடையே தோன்றி மறையும் முகங்களைக் கண்டுபிடிப்பது என்பது சவாலானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளின் மீது சில வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. மனோ பகுப்பாய்வுத் துறையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஒரு பகுதியாக உள்ளன. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களை பார்க்க முடியும். 13 பேரின் முகங்கள் மறைந்திருக்கும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன் படம் அப்படிப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான படம்.
இந்த படம் பெவ் டூலிட்டில் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது காடுகளின் கண்கள் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் காட்டில் மறைந்திருந்து பயணிகளைப் பார்க்கும் மனிதர்களின் அனைத்து முகங்களையும் கண்டறிவது சவாலானது. உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளதா இல்லையா என்பதைச் சொல்லும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் அறிவுத்திறனை சோதிக்க உதவும். நீங்கள் எவ்வளவு நபர்களின் முகங்களைக் கண்டீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் ஐக்யூ நிலை கருதப்படும்.
10 முகங்களுக்கு மேல் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை "சிறந்த நிலையில்" உள்ளது.
இந்த இல்யூஷனில் 7 முகங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை "நல்ல நிலையில்" உள்ளது.
உங்களால் 4 அல்லது 5 முகங்களை மட்டுமே கண்டறிய முடிந்தால், உங்கள் மனதிற்கு உதவி தேவை என்று அர்த்தம்.
நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடையைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள். ஸ்மார்ட்டாக ரிலாக்ஸாக இருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.