இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் குழப்பத்தை அளித்து பிறகு தெளிவை அளிப்பவை. தவளையின் ஓவியம் போல இருக்கும் இந்த படத்தில் தவளையைவிட பெரிய விலங்கு மறைந்திருக்கிறது அது என்ன விலங்கு என்று கண்டுபிடிங்க என்பதுதான் உங்களுக்கான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்வையாளர்களை முடிவில்லா குழப்பத்தில் ஆழ்த்தி இறுதியில் தெளிவை அளித்து ஆச்சரியம் அளிப்பவை. இதனால், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தை நோக்கி காந்தமாக ஈர்க்கப்படுகிறார்கள்.
Advertisment
இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடிங்க, முதல் பார்வையில் என்ன தெரிகிறது உங்கள் ஆளுமையைத் தெரிந்துகொள்ளுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன்கள் சமீப காலமாக இணையத்தை ஒரு புயல் போல தாக்கி கலக்கி வருகிறது. அந்த அளவுக்கு சுவாரசியமாக நெட்டிசன்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. பார்த்துக்கொண்டிருக்கும்போது தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தி குழப்பம் அடையச் செய்பவை. உண்மையில் இந்த படத்தில் இருப்பது என்ன என்று விளங்கிக்கொள்ள முடியாமல் தலை முடியை பிச்சிக்கொள்ளச் செய்பவை.
அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் குழப்பத்தை அளித்து பிறகு தெளிவை அளிப்பவை. தவளையின் ஓவியம் போல இருக்கும் இந்த படத்தில் தவளையைவிட பெரிய விலங்கு மறைந்திருக்கிறது அது என்ன விலங்கு என்று கண்டுபிடிங்க என்பதுதான் உங்களுக்கான சவால்.
நீங்கள் இந்த படத்தில் தவளைக்குள் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடித்துவிட்டால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவுவதற்காக ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தை சற்று பக்கவாட்டில் இருந்து பாருங்கள் தவளை வேறு ஒரு விலங்காக மாறி மாயாஜாலம் நடப்பதைப் பார்க்கலாம். இப்போதும் அது என்ன விலங்கு என்று பிடிபடவில்லை என்றால் விடையை நேரடியாகவே கூறுகிறோம். தவளைக்குள் தவளையைவிட பெரிய விலங்கு குதிரையின் தலை இருப்பதைப் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"