Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனிக்கும் திறனை சோதிக்கும் புதிர், மேலோட்டமான பார்வைக்கு தெரியாத மறைக்கப்பட்ட உருவம் துருவித் தேடும்போது தெரியும். சில சமயம் துருவித் தேடினாலும் தெரியாது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் ‘பாலே’ நடனம் ஆடும் பெண்ணை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் மூளையின் தேடும் வேகத்தை மேம்படுத்தலாம், ஒரு காட்சியை நுட்பமாகப் பார்க்கப் பழக்கலாம். நீங்கள் ஒரு சவாலைத் தீர்க்கும்போது, உங்கள் மூளை டோபமைனை வெளியிடுகிறது. இது மகிழ்ச்சி மற்றும் வெகுமதியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியல் கடத்தி ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
நீங்கள் இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? சிறிது டோபமைன் வெளிப்படுவதை அனுபவிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன சவாலை எதிர்கொண்டு கண்டுபிடியுங்கள். அந்த மன அழுத்தத்தை போக்குங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் பசுமையான பெரிய மரங்கள் வரிசையாக இருக்கின்றன. இந்த மரங்களில் ஒரு பாலே நடனமாடும் பெண் மறைந்திருக்கிறாள். அந்த பாலே நடனப் பெண்ணை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான். ஏனென்றால் இது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு ஆச்சரியமான ஒரு எளிய புதிர்
பாலே நடனம்
பாலே (Ballet) என்பது இத்தாலியப் புரட்சியின் போது உருவான நடனம் ஆகும். பின்னர், பிரான்சு, ரசியா ஆகிய நாடுகளில் பரவலான நடனம் ஆகியது. பிரெஞ்சு கலைச்சொற்களை உள்ளடக்கி, நாட்டிய அமைப்பும் மேம்படுத்தப்பட்டது. உலகளவில் செல்வாக்கு பெற்ற இந்த நடனம் வேறு பல நடனங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் பாலே நடனப் பெண்ணை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்திருந்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் மரங்கள்தான் இருக்கிறது பாலே நடனப் பெண் எங்கே இருக்கிறாள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மரங்களை உற்று கவனித்துப் பாருங்கள். பாலே நடனப் பெண் மரமாக இருப்பதைப் பாருங்கள்.
இப்போது நீங்கள் பாலே நடனப் பெண்ணை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்களா கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்காக மரங்களில் மறைந்திருக்கும் பாலே நடனப் பெண்ணை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.