காட்டு மாடுகளுக்கு இடையே ஒரு கரடி… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும் காட்டுமாடுகளுக்கு இடையே ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி சளைக்காமல் படையெடுத்து வருகிறார்கள்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்றா சவாலை ஏற்று நெட்டிசன்கள் வெறித்தனமாக விடையைக் கண்டுபிடித்து வருகிறார்கள். இணையதளங்களும் சமூக ஊடங்களும் அவர்களுக்கு தினமும் பல நூறு புதிர்களை அளித்துக்கொண்டே இருக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டுமாடுகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கின்றனர். அவைகளுக்கு இடையே ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க மாஸ்டர்தான்.
ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவால்கள் மிகவும் சுவாரசியமானனவை. பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறதே என்று விடையைத் தேடத் தொடங்கினால், உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாகத் தேடினால், உங்கள் மூளையைக் குழப்பும், இன்னும் தீவிரமாகத் தேடினால், உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். ஆனால், கொஞ்சம் நிதானமாக ஸ்மார்ட்டாகத் தேடினால் விடை தெரியும். முவிடில் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷம் அளிக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Connexion blog என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் காட்டு மாடுகள் கூட்டமாக மறைந்திருக்கிறது. காட்டு மாடுகளுக்கு இடையே ஒரு கரடி மறைந்திருக்கிறது. அதை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் மிகவும் கடினமானது.
நீங்கள் இந்நேரம் காட்டு மாடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, இன்னும் நீங்கள் கரடியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். கரடி தலைமட்டும் தெரியும் பாருன்கள். படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்து கரடியைக் கண்டுபிடியுங்கள்.
கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"