Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளி போல இணையத்தை தாக்கி வருகிறது. அதன் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் தன்மையால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகின்றனர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விடையளிப்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பதாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே மிளகைத் தேடுவதைப் போன்றது.
முடிவில்லாத குழப்பத்தை அளித்து, தேடித் தேடி சோர்ந்து போகும் நேரத்தில், விடை தெரியும்போது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் 2 படங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு படத்தில் பறவையையும் மற்றொரு படத்தில் பாம்பையும் 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பாரவைக்கு சவால்… கண்டுபிடித்துவிட்டால் நிஜமாகவே நீங்கள் கில்லாடிதான்.

இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது காட்டில் உள்ள ஒரு ஓடையின் பாறைகள் நிறைந்த பகுதி ஆகும். புகைப்படக்காரர் பறவையைப் படம் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், பறவை சற்று விலகியதால் அது ஒரு ஆப்டிகல் இல்யூஷனாக மாறியுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள பறவையை 11 வினாடிகளில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
11 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் பறவையைக் கண்டுபிடித்டுவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள், கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.

இந்த படத்தில் அந்த பறவையை படம் முழுவதும் தேட வேண்டியதில்லை. படத்தில் இடது பக்கம் மட்டும் நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். பாறையைப் போல பறவை தெரியும் பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆபத்தான பாம்பு ஒன்று மறைந்திருக்கிறது. அதை 11 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
இந்த படத்தில் நீங்கள் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவ ஒரு குறிப்பை தருகிறோம்.
பாம்பு தரையில்தான் இருக்கும் என்று தரையில் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். படத்தில் வலதுபுறத்தில் உள்ள மரக்கிளைகளைப் பாருங்கள்.
அது ஒரு கிளை போலத் தோன்றலாம். இப்போது பதுங்கியிருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நம்புகிறோம்.

உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் 11 நொடிகளில் பறவையையும் பாம்பையும் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நிஜமாகவே நீங்கள் கில்லாடிதான். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”