/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-butterfly-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் காட்சிகளைப் பார்த்து புரிந்துகொள்ளும் திறன்களை சோதிக்க ஒரு வேடிக்கையான வழியாகும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் ஓய்வு நேரத்தை சலிப்பூட்டாமல், சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்க வழிவகுக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-butterfly-1-1.jpg)
கண்ணைக் கவரும் வண்ணப் பூக்களுக்குள் மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
நமது கண்களும் மூளையும் காட்சித் தகவலைச் செயலாக்கும் விதம் சில சமயங்களில் தவறாக வழிநடத்தும் என்பதால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளையைக் குழப்புகிறது. அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் கண்காணிப்புத் திறனை வளர்த்து, நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் மாஸ்டர் ஆக உதவுகின்றன. அத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-butterfly-2.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கண்ணைக் கவரும் வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்திருக்கிறது. இந்த வண்ணப்பூக்களுக்கு இடையே ஒரு பட்டாம்பூச்சி மறைந்திருக்கிறது. பல வண்ணங்கள் கலந்திருப்பதால் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிப்பது கடினம். உங்கள் கவனிக்கும் திறனைப் பயன்படுத்தி வண்ணப் பூக்கள் இடையே பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
பட்டாம்பூச்சிகளை வண்ணத்துப் பூச்சிகள் என்று அழைக்கிறோம். கிட்டத்தட்ட 20,000 வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இந்நேரம் நீங்கள் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-butterfly-2-1.jpg)
ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் பட்டாம்பூச்சியிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை பெரிதாக்கி பாருங்கள். பட்டாம்பூச்சியை பட்டென பிடித்துவிடலாம்.
நீங்கள் இன்னும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. உண்மையான புதிர் மாஸ்டர்கள் கூட குழப்பமடைகிறார்கள். எந்த நேர வரம்பும் இல்லாமல் பட்டாம்பூச்சி எங்கு மறைந்துள்ளது என கண்டுபிடிக்கலாம்.
இப்போது உங்களுக்காக கண்ணைக் கவரும் வண்ணப் பூக்கள் இடையே பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Optical-Butterfly-3.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் காட்சி திறன்களுக்கு ஒரு உண்மையான சவாலாக இல்லையா? இந்த புதிர்களை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு உண்மையான புதிர் மாஸ்டராக வெளிப்படுவீர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.