Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களுக்கு வெறித்தனமாக விடை தேடி புதிரை விடுவித்து வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானனவை. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடையளிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு நடுவே ஒற்றை மிளகைத் தேடுவதைப் போன்றது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பத்தையும் பிறகு மேலும் முடிவில்லா குழப்பத்தையும் அளித்து உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மனித முகங்களுக்கு இடையே உள பூனையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால், நீங்கதான் ஃபர்ஸ்ட் பாஸ்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மனித முகங்கள் நிறைந்திருக்கிறது. அதில் ஒரே ஒரு பூனை மட்டும் மறைந்திருக்கிறது. அந்த பூனையை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. அதனால்தான், நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நிஜமாகவே நீங்கதான் ஃபர்ஸ்ட் பாஸ்.
மனித முகங்களுக்கு இடையே மறைந்துள்ள பூனையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.

கண்ணாடி அணிந்திருக்கும் பெண்ணின் முகத்துக்கு அருகே பூனை மறைந்திருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுக் கவனித்து பூனையைக் கண்டுபிடியுங்கள். எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் இன்னும் பூனையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”