scorecardresearch

பனி மூடிய காட்டில் புலிகள்… பூனைக் குட்டியை வெறித்தனமாக தேடும் நெட்டிசன்கள்… 10 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பனி மூடிய காட்டில் ஒரு தாய்ப் புலியும் அதன் குட்டியும் இருக்கிறது. அதே நேரத்தில், மறைந்திருகும் பூனைக் குட்டியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

பனி மூடிய காட்டில் புலிகள்… பூனைக் குட்டியை வெறித்தனமாக தேடும் நெட்டிசன்கள்… 10 நொடிகளில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, யானை, கரடி, பூனை விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே, அதுவரை சோர்ந்துபோய் இருந்த நெட்டிசன்கள் உடனே பரபரப்பாகி சவாலை ஏற்றுக்கொண்டு ஆப்டிகல் இல்யூஷனில் வெறித்தனமாக விடையைத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மூடிய ஒரு காட்டில் ஒரு தாய்ப் புலியும் அதன் குட்டியும் இருக்கிறது. இந்த படத்தில் புலிகள மட்டுமல்ல ஒரு பூனைக்குட்டியும் இருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானவை. முதல் பார்வையில் பார்க்கும்போது ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். தேடலில் உற்சாகம் அளிக்கும், கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது ஏற்படும் குழப்பம் விரும்பும்படியாக இருக்கும். எங்கே இருக்கிறது என்று தேடும் போது த்ரில்லிங்காக இருக்கும். அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவாலை ஏற்று கண்டுபிடித்து விளையாடுகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன்படம் லேட்டஸ்ட் நியூஸ் ஃபிரஷ்ஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. ஒரு பனிப்பொழிவு காலத்தில், பனி மூடிய காட்டில் ஒரு தாய்ப் புலியும் அதன் கூட்டியும் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் பூனைக் குட்டியும் இருக்கிறது. இந்த சவாலை ஏற்று நெட்டிசன்கள் பூனைக் குட்டியை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். சிலர் மட்டுமே ஸ்மார்ட்டாக யோசித்து எளிதாக கண்டுபிடித்துள்ளார்கள்.

புலியை அறிவியல் வரையறைப்படி பூனை குடும்பம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், இதை புலிகள் ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியாது. ஏனென்றால், புலிகள் மான்களை வேட்டையாடும். ஆனால், பூனைகள் எலிகளை மட்டுமே வேட்டையாடும்.

இந்நேரம் நீங்கள் உங்கள் கூர்மையான பார்வையின் மூலம் இந்த படத்தில் உள்ள பனி மூடிய காட்டில் புலிகள் இருக்கும் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பூனைக் குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளுக்குள் பூனைக் குட்டியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்க கெட்டிக்காரர்தான்.

ஒருவேளை, உங்களால் பூனைக் குட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பறவை போல இருக்கும் ஆனால் அது பறவை அல்ல. இந்த குறிப்பை வைத்துக்கொண்டு படத்தை நன்றாக உற்றுப் பார்த்து பூனைக் குட்டியைக் கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் அந்த பூனைக் குட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பூனைக் குட்டி எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden cat among tigers in snow forest open challenge