New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-find-cat.jpg)
Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் ஒரு நரி இருக்கிறது. ஆனால், ஒரு பூனை மறைந்திருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க கிரேட் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் கடினமானது.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதகளம் செய்து வருகிறது. இந்த படத்துல மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையை கண்டுபிடிங்க என்று சவால் விடுத்து வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகப் பார்த்து விடையைத் தேடி வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல அளிப்பவையாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களுக்கு விடைதேடுவது என்பது மிகவும் சவாலானது. ஏனென்றால், அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைத் தேடுவதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியை ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் ஒரு நரி இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். பூனையைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் கிரேட் தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த புதிர் கடினமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் நீங்கள் பூனையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் கிரேட். ஆனால், கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
இந்த ஓவியத்தில் பூனை தரையில் இல்லை. பூனை நிஜமான உருவத்தில் இல்லை. அந்த பூனை இல்யூஷனால் மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பூனையைப் பொன்ற தோற்றம் தெரிகிறதா என்று மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இப்போது பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பூனை எங்கே இருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.