/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-18.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்” என்ற கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல், வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும், தேடத் தொடங்கினால் உங்கள் மூளையைக் குழப்பும், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-1-1.jpg)
இன்றைய ஆப்டிகள் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுவதும் அழகழகான வண்ண வண்ணக் கிளிகள் நிறைந்திருக்கிறது. கிளிகளுக்கு நடுவே உங்கள் கண்களை ஏமாற்றும் நிறம் மாறும் பச்சோந்தி மறைந்திருக்கிறது. அதை அரை நிமிடத்தில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி அரை நிமிடத்தில் கண்டுபிடித்தால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்க ஹீரோதான். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு சவாலானது.
பச்சோந்தி அது இருக்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும். அங்கே இருப்பது கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைந்திருக்கும். மறைந்திருக்கும் இரையைப் பிடிக்கும். அதனால்தான், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்தி என்று கூறுவார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊட்கங்களிலும் அதிக அளவில் பகிரப்படுகிறது. கணியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும்போது, கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களே உதவுகிறது.
இந்நேரம் நீங்கள் வண்ண வண்ண கிளிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நிறம் மாறும் பச்சோந்தியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள் ஹீரோதான்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-parrot.jpg)
ஒருவேளை நீங்கள் பச்சோந்தியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பச்சோந்தியின் கண்கள் வேறு நிறமாகவும் உடல் பச்சை நிறத்திலும் இருகிறது. இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் பச்சோந்தியை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
உங்கள் கண்களை ஏமாற்றும் நிறம் மாறும் பச்சோதியை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-28T121235.807.jpg)
கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் ஹீரோவாக இருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.