/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-ML.jpg)
Optical Illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் ஒரு சிம்பன்சி குரங்கு மறைந்திருக்கிறது. அதோடு ஒரு புலி மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களு விடை தேடுவதில் நீங்கதான் கிங்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. நவீன வாழ்கையில் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் கணினியில் வேலை செய்யும் மனிதர்களுக்கு, சோர்வில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்கள் ரிலாக்ஸாக இருப்பதற்கு உதவுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டுகளாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் வேலைக்கும் நல்ல பயிற்சி அளிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-illusion-ML-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியை மறைத்துவைத்துவிட்டு தேடுவது போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் காகிதப் பூக்களுக்கு மத்தியில் இயற்கையான பூக்களைத் தேடுவதைப் போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் சிம்பன்சி குரங்கு ஒன்று மறைந்திருக்கிறது. அதோடு, ஒரு புலியும் மறைந்திருகிறது. சிம்பன்சியையும் புலியையும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். இந்த சவால் மிகவும் எளிமையானதாகத் தெரியலாம். ஆனால், கடினமாக இருக்கும். சிம்பன்சியையும் புலியையும் கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் கிங்.
சிம்பன்சியையும் புலியை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிம்பன்சி வலது பக்கத்தில் இல்லை. புலி நிஜப் புலி இல்லை. அது ஆப்டிகல் இல்யூஷனாக மறைக்கப்பட்டிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-08T153606.364.jpg)
இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் சிம்பன்சியையும் புலியையும் சிம்பிளாகக் கண்டுபிடியுங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. சிம்பன்சியும் புலியும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/New-Project-2022-08-08T153703.628.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.