Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கணினியில் வேலை நெருக்கடியால சோர்ந்துபோய் இருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. ஒரு படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது பொருட்களைக் கண்டுபிடிப்பதில் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சவால் விடப்படும் புதிர்கள் என்பது மனிதர்கள் பொதுவாக ஒரு படத்தை எப்படிப் பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதனால், நீங்கள் யோசிக்கவே முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்படும். அப்படியே வெளிப்படையாக வைத்தாலும், அதைப் போன்ற உருவ ஒற்றுமையுள்ள பொருட்களுக்கு இடையே மறைத்து வைத்து பார்ப்பவர்களைக் குழப்பமடையச் செய்யும் விதமாக இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கடற்கரையில் வழுவழுப்பான பாறைகள் நிறைய இருக்கிறது. ஆனால், அந்த பாறைகளுக்கு இடையே ஒரு சங்கு மறைந்திருக்கிறது. பாறைகளுக்கு இடையே இருக்கும் சங்கை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கதான் கெட்டிக்காரர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏதோ புதிய ஒரு விஷயம் அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பண்டைய கிரேக்க - ரோமானியர் காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளனர். கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நின்று கொண்டிருக்கிற இடம் நகர்வதை ஆப்டிகல் இல்யூஷன் என்றார். ஆப்டிகல் இல்யூஷன் என்றால் வேறு ஒன்றுமில்லை, அது ஒரு தோற்ற மயக்கம்.
இந்திய மரபில், பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் தன்மையைக் கொண்டுள்ளன. கோயில்களில் இடம் பெற்றுள்ள யாளி சிற்பம்கூட ஆப்டிகல் இல்யூஷன் வடிவம் என்று கருதலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் ஃபிரஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு கடற்கரை காட்சி இடம்பெற்றுள்லது. கடற்கரையில் அலைகள் தழுவும் இடத்தில் நிறைய வழுவழுப்பான பாறைகள் இருக்கிறது. அந்த பாறைகளுக்கு இடையே ஒரு சங்கு இருக்கிறது. அந்த சங்கை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விடை கண்டுபிடிப்பதில் கெட்டிக்காரர் நீங்கள்தான். ஏனென்றால், இந்த படத்தில் வழுவழுப்பான கறுப்பு, வெள்ளை பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கும் சங்குவை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
இந்நேரம் நீங்கள் அலைகள் தழுவும் கடற்கரையில், வழுவழுப்பான பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கும் சங்குவை 10 நொடிகளில் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் சங்கு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சஞ்கு வெள்ளை நிறத்தில் கூம்பு போல இருக்கும் இல்லையா? மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்து சங்கு எங்கே இருக்கிறது என தேடுங்கள்.
இப்போது இந்தப் படத்தில் சங்கு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருப்பினும், இன்னும் உங்களால் சங்கு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக சங்கு இருக்கும் இடத்தைக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டராகுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.