Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், வெறித்தனமாக விடையைத் தேடுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் முதல் பார்வையில் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது போல இருக்கும் ஆனால், தேடத் தொடங்கினால், தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மலைப் பகுதியில் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தை 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே கெத்துதான். ஏனென்றால், இது மிகவும் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றது நெட்டிசன்கள் உடனே பரபரப்பாகி தேடத் தொடங்கி விடுகிறார்கள். நெட்டிசன்கள் மட்டுமல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்றுக்கொண்டு மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு மலைபகுதியைக் காட்டுகிறது. இந்த மலைப் பகுதியில் ஒரு மலைச் சிங்கம் (Cougar) மறைந்திருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்துதான். ஏனென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் கெத்துதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாறை பகுதிகளில் குகைபோன்ற பகுதியில் பார்க்கவும். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.