/tamil-ie/media/media_files/uploads/2022/11/Optical-illusion-Elephant-A.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுப்டித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பார்வைத் திறன் மற்றும் வேகமாக யோசித்து தேடும் திறனுக்கான சவால். இந்த சவாலை எதிர்கொள்ளும்போது சுவாரசியம், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், ரிலாக்ஸ் என எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Optical-illusion-Elephant-B.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். மலை, காடு, புல்வெளி என காட்சி அளிக்கும் இந்த படத்தில், ஒரு யானை மறைந்திருக்கிறது. அந்த யானை எங்கே இருக்கிறது என்று 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனிஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். யானையைக் கண்டுபிடித்து நீங்களும் ஜீனியஸ் என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். யானை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்தைச் சுற்றி கவனமாகப் பாருங்கள். யானையைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் யானையே இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Optical-illusion-Elephant-C.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.