Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு யானை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லாடி பாஸ். ஏனென்றால், உங்களை ஜாலியாக சுற்றவிடும் நோக்கத்தில் இல்யூஷன் செய்திருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடும் சவால் இவ்வளவு எளிதாக இருக்கிறதே என்று நினைத்து களம் இறங்கிவிட்டிருக்கிறீர்கள். இந்த படத்துல படத்துல அவ்வளவு பெரிய யானையைக் கண்டுபிடிக்க முடியாதா என்று தேடத் தொடங்கிவிட்டீர்கள். ஆனால், அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
ட்விட்டரில் வெளியாகி உள்ள இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். நடைபயிற்சி செய்யும் பூங்காவில் ஒரு குடும்பத்தினர் தரைவிரிப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கல். ஓரு பெண் தனது நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து செல்கிறார். ஒருவர் அந்த பூங்காவில் இருக்கும் பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறார். அருகே அழகான கட்டிடங்கள் இருக்கிறது. பூங்காவில் மரங்கள் இருக்கிறது. ஒரு சிறுவன் தனது செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்த படத்தில் ஒரு யானையும் இருக்கிறது. அந்த யானையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மனிதர்கள் இருக்கிறார்கள், மரங்கள் இருக்கிறது, நாய்கள் இருகிறது. இது எல்லாம் எளிதாகத் தெரிகிறது. அவ்வளவு பெரிய யானையும் எளிதாகத் தெரியும் கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், படத்தை வரைந்தவர் அந்த யானையை இல்யூஷன் செய்திருகிறார்.
பெரிய விலங்கினமான யானை எங்கே மறைந்திருக்கிறது என்பதுதான் சுவாரசியமானது. யானையைக் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்று தேடத் தோடங்குவீர்கள். தேடத் தொடங்கியதும் அது உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா… முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்ட யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளுக்குள் யானையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே கில்லாடிதான் பாஸ்.உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் யானை உண்மையான யானை அல்ல. அது இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.