மறைந்திருக்கும் யானை… வேட்டைக்காரனுக்கு முன் 11 நொடிகளில் கண்டுபிடிச்சா… நீங்க ஜீனியஸ்தான்!
Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு யானை மறைந்திருக்கிறது. அந்த யானையை 11 நொடிகளில் யானையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்தான்.
Optical Illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெரிய யானை மறைந்திருக்கிறது. அந்த யானையை ஒரு வேட்டைக்காரன் துப்பாக்கியுடன் தேடிக் கொண்டிருக்கிறான். அதனால், வேட்டைக்காரனை முந்திக்கொண்டு 11 நொடிகளில் யானையைக் கண்டுபிடித்து காப்பாற்றுங்கள் இதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து குழப்பத்தில் ஆழ்த்தும் ஆனால், பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.
சமீப காலமாக இணையத்தில் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்க்க மிகவும் சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருப்பதுதான் காரணம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் முதல் பார்வையில் எளிமையாக இருக்கும், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், இரண்டாவது பார்வையில் உங்கள் மூளையைக் குழப்பி, தலைமுடியை பிச்சிகொள்ளச் செய்யும். ஆனால், அது சுவாரசியமாக இருக்கும். அதனால்தான், நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து சிறிது நேரம் ரிலாக்ஸாக விளையாட நெட்டிசன்கள் பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் பக்கம் வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் தி மைண்ட் ஜோர்னலில் வெளியாகி உள்ளது. இந்த கோட்டோவியத்தில், ஒரு காட்டுப் பகுதியில் ஒரு வேட்டைக்காரன் துப்பாக்கியுடன் ஒரு யானையை வேட்டையாட தேடிக்கொண்டிருக்கிறான். ஆனால், அந்த யானை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைந்திருக்கிறது. ஆனாலு, அந்த வேட்டைக்காரன் தீவிரமாக யானையைத் தேடிக்கொண்டிருக்கிறான். அந்த வேட்டைக்காரன் யானையைக் கண்டுபிடித்து சுடுவதற்கு முன், யானையைக் காப்பாற்றுங்கள். அதுவும் 11 நொடிகளில் யானையைக் கண்டுபிடியுங்கள். அப்படி கண்டுபிடித்தால் நீங்க நிஜமாவே ஜீனியஸ்தான். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த புதிர் சவாலானது.
நீங்கள் யானையைக் கண்டுபிடித்து காப்பாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். பாராட்டுகள். யானையை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நீங்கள் இந்த படத்தை நேராகப் பார்த்தால் யானையைக் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை தலைகீழாக நின்றால் சாத்தியம். இது நகைச்சுவைதான். இப்போது யானை தெரியும் பாருங்கள்.
இன்னும் உங்களால் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக யானை எங்கே இருக்கிறது? இந்த படத்தை எப்படி பார்த்தால் யானை தெரியும் என்று சொல்கிறோம். படத்தை தலைகிழாகத் திருப்பிப் பாருங்கள். யானை தெரியும். மரங்கள் யானையின் கால்களாகவும் தும்பிக்கையாகவும் மாறி இருப்பதைப் பாருங்கள். உண்மையில் வேட்டைக்காரன் யானைக்குள் தான் சிக்கி இருக்கிறான் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”