Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் தீங்கில்லாத அடிக்ஷனாகி இருக்கிறது. ஒரு பெரிய ராட்சத காந்தம் போல, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இதற்கு காரணம் இதில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியம்தான் காரணம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மலையில் மறைந்திருக்கும் குளிர் முகத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில், ஓடும் நதியைப் பார்க்கும்போது அருகே இருக்கும் நிலப்பரப்பு நகர்வதைப் போற்ற தோற்றத்தை ஆப்டிகல் இல்யூஷனாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பனிப் பிரதேசத்தில் உள்ள பனி மலையில், ஒரு குளிர் முகம் மறைந்திருக்கிறது. பனி மலையில் அந்த முகம் எங்க மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியாது என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி, கண்டுபிடித்தால் நீங்களும் பலே கில்லாடிதான்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பனி மலையில் மறைந்திருக்கும் முகத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் பனிமலையில் மறைந்திருக்கும் முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த முகம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாறைகளும் பனி போர்த்திய மலைகளும் ஆனது அந்த முகம் கவனமாகப் பாருங்கள்.
இப்போது பனி மலையில் மறைந்திருக்கும் முகம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் முகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.