Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு கடற்பகுதியில் அமர்ந்திருக்கும் பருந்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கழுகுப் பார்வையில் தேடிப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவாக்கப்பட்டது அல்ல. எகிப்தில் 3,500 அண்டுகளுக்கு முன்னரே இருந்ததாகக் கூறுகிறார்கள். கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பழங்கால சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷனுக்கு உதாரணமாகக் கூறலாம். யாளி சிற்பத்தைக்கூட அந்த வரிசையில் கூறலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சில முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்றுப் பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மேலோட்டமாகப் பார்த்தால் அதில் மறைந்திருக்கும் விலங்கு தெரியாது. ஆனால், உற்றுப் பார்த்து ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் கண்டுபிடித்து விடலாம்.
இந்த படம் அமெரிக்காவில் உள்ள ஓரிகான் கடற்பகுதியில் மலைகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற பகுதி. இந்த இடத்தின் புகைபடங்கள் நிறைய இணையத்தில் இடம்பெற்றுள்ளது. ஓரிகான் கடல்சூழ் மலைப் பகுதி புகைப்படத்தில், லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளம் ஒரு பருந்தை இல்யூஷன் செய்து இந்த படத்தில் மறைந்திருக்கும் பருந்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் செய்துள்ளது.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பருந்தை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்க செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், இந்த சவால் அந்த அளவுக்கு கடினமானது. கழுகுப் பார்வையில் தேடுங்கள், பருந்து எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுதான். ஆனால், அது உங்கள் கண்களை ஏமாற்றி, மூளையைக் குழப்பி தலை முடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்து.
இந்நேரம் நீங்கள் இந்த படத்துல மறைந்திருக்கும் பருந்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பருந்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பருந்து மலையில் அமர்ந்திருக்கிறது. இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது நீங்கள் மலையில் இருக்கும் பருந்தை கழுகுப் பார்வையில் எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் பருந்து எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.