தாமரை குளத்தில் மறைவாக பதுங்கிய தவளை: 30 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு குளத்தில் உள்ள தாமரைப் பூக்களுக்கும் தாமரை செடிகளுக்கும் இடையே சத்தமில்லாமல் மறைந்துள்ள தவளையை 30 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க ‘ஷார்ப்’தான் பாஸ்.
Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற உடுமலை நாராயணகவி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருதுமோ அதே அளவுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இந்த விலங்கைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என விடுக்கும் சவால்கள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். ஆனால், விடையைத் தேட முயற்சி செய்தால் அதில் மூழ்கிப்போய் மலைத்துப்போவீர்கள். அதனால், தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பலரும் மூளைக்கும் கண்ணுக்கும் பயிற்சி தருகிற புதிராகப் பார்க்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். அதே போலதான், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு குளத்தில் உள்ள தாமரைப் பூக்களுக்கும் தாமரை செடிகளுக்கும் இடையே சத்தமில்லாமல் மறைந்துள்ள தவளையை 30 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். அப்படி கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க ‘ஷார்ப்’தான் பாஸ்.
தாமரை மலர்களுக்கு இடையே சத்தமில்லாமல் மறைந்திருக்கும் தவளையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நிஜமாகவே நீங்க ‘ஷார்ப்’தான். பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
படத்தை மீண்டும் ஒரு முறை நன்றாக உற்று கவனியுங்கள். சத்தமில்லாமல் மறைந்திருக்கிற அந்த தவளை பச்சை நிறத்தில் இருக்கிறது.
அந்த தவளை உங்களுக்கு தாமரை இலை போல தெரியலாம். அதனால், அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி அதன் கண்களை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும்.
தவளையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒலிந்திருக்கும் தவளை எங்கே இருக்கிறது என்பதற்கான விடையை இங்கே தருகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"