Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்பார்த்து நெட்டிசன்கள் அகோரப் பசியுடன் இருக்கிறார்கள். மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றி எவ்வளவுதான் கணக்கில்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அளித்தாலும் யானைப் பசிக்கு அளித்த சோளப்பொறியாக போதாமல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அது ஒரு மாயாஜாலம். அது ஒரு தந்திரம், அது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, அது உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் புதிர். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக சுறுசுறுப்பாகத் தேடினால். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் நீங்கள்தான் ஜாம்பவான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் ‘கலர்ஃபுல்’லாக வரையப்பட்ட ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் உள்ள கொடிகள், இலைகள், பூக்கள் மிகவும் அழகாக கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. இந்த படத்துல மறைந்திருக்கும் தங்கமீனை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஓவியத்தில் தங்கமீனைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், தங்கமீனை தூண்டில் போட்டாலும் கண்டுபிடிக்க முடியாது. வலைவீசினாலும் பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு சவாலானது.
இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம் போல ஈர்க்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவாலை விளையாடுவதற்கான ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் தங்க மீனை, நீங்கள் இந்நேரம், கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் தங்க மீனை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய தங்க மீன் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். தங்க மீன் ஓரத்தில் அமைதியாக இருக்கிறது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் தங்க மீனை கண்டுபிடிக்கவில்லை என்றால், தங்க மீன் எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.