New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Optical-illusion-elephants-heart.jpg)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு இதயம் இருக்கிறது. அந்த இதயத்தை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் என்பதுதான் உங்களுக்கான சவால்.
Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம், நினைத்துப் பார்க்காத அளவில் புதுப்புது புதிர்கள் திகட்டாத சுவாரசியத்தை தருகின்றன. இதனால், நெட்டிசன்களை ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் காந்தம் போல ஈர்த்து வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முடிவில்லாத குழப்பத்தை அளிக்கும். இறுதியில் விடை தெரியும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு இதயம் இருக்கிறது. அந்த இதயத்தை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் என்பதுதான் உங்களுக்கான சவால்.
இந்த படத்தில் பிங்க், நீலம், லேவண்டர், வெள்ளை ஆகிய வண்ணங்களின் யானைகள் கூட்டமாக இருக்கிறது. இந்த யானைகளுக்கு மத்தியில்தான், ஒரு குட்டி இதயம் இருக்கிறது. அதை 20 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் எளிதாக இருக்கும். ஆனால், கண்டுபிடிப்பது மிகவும் சவாலனாது.
இந்த யானைக் கூட்டங்களில் உற்றுக் கவனித்தால், வழைப்பழம் வைதித்திருக்கிற ஒரு யானையைப் பார்க்கலாம் அதே போல தொப்பி வைத்திருக்கிற ஒரு யானையையும் பார்க்கலாம். இன்னொரு யானை மலர் மாலையை அணிந்திருக்கிறது. ஆனால், இதயத்தைக் கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கும்.
நீங்கள் இதயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவுவதற்காக ஒரு குறிப்பு தருகிறோம். அதில், வழக்கமாக நீங்கள் இதயத்தை சிவப்பு நிறத்தில் பார்த்துப் பழகியிருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் இதயம் சிவப்பு நிறத்தில் இல்லை.
இப்போது இதயத்தைத் தேடுங்கள், இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு இன்னொரு குறிப்பு தருகிறோம். இதயம் பிங்க் நிற யானையில் இருக்கிறது. இன்னும் உங்களால் இதயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதயம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.