Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, அதில் உள்ள விவரங்களை நீங்கள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறீர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்பதை சோதிக்க எளிமையான வழியாகும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காண்டாமிருகங்கள் இடையே மறைந்திருக்கும் நீர்யானையை 13 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு பெரிய ராட்சத காந்தம்போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பொதுவாக மனிதர்களுக்கு தேடலில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை தேடும்போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தையாக இருக்கும். உங்களை மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. காண்டாமிருகங்கள் இடையே ஒரு நீர்யானை மறைந்திருக்கிறது. தோற்றத்தில் காண்டாமிருகமும் நீர்யானையும் பெரிய விலங்குகள். உருவமை ஒற்றுமை கொண்டவை. அதனால் காண்டாமிருகங்கள் இடையே மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியம். அதனால், இந்த படத்தில் காண்டாமிருகங்கள் இடையே மறைந்திருக்கும் நீர்யானையை 13 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கே நீங்கள் ஜீனியஸ் என்பது தெரியும்.
நீங்கள் இநேரம் காண்டாமிருகங்கள் இடையே மறைந்திருக்கும் நீர்யானையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் நீர்யானை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் என்று கூறுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இன்னும் நீர்யானையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.