Advertisment

இந்த படத்துல நீர்யானை எங்கே இருக்கு? 17 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீர்யானை எங்கே மறைந்திருக்கிறது என 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

author-image
WebDesk
New Update
hippo 1

இந்த படத்துல நீர்யானை எங்கே இருக்கிறது என 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று ஒருமுறை மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு, ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதை யாராலும் தடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால் சுவாரசியமானது. அதனால்தான், நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கலைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

hippo 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீர்யானை எங்கே மறைந்திருக்கிறது என 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், மேஜி, மாயாஜாலம், கண்கட்டி வித்தை ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

hippo 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள பூங்காவில் குழந்தைகள் உடன் குடும்பமாக பொழுதைக் கழிக்கின்றனர். ஒரு பெண் தனது நாயை நடைபயிற்சி அழைத்துக்கொண்டு செல்கிறார். ஒரு இளைஞர் சைக்கிள் ஓட்டிச் செல்கிறார். அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு நீர்யானை இருக்கிறது. நீங்கள் சாதாரணமாகப் பார்த்தால் அந்த நீர்யானை தெரியாது. கூர்மையான பார்வையுடன் புத்திசாலித் தனமாகத் தேடிப் பார்த்தால் நீர்யானை தெரியும். அதனால், இந்த படத்தில் நீர்யானை எங்கே மறைந்திருக்கிறது என 17 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். முயற்சி செய்து பாருங்கள். இந்த உலகத்திற்கு நீங்க கிங் என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

hippo 2

ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நீர்யானை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். அது உண்மையான நீர்யானை அல்ல, அது ஒரு பொம்மை நீர்யானை, தண்ணீரிலும் இருக்கலாம், தரையிலும் இருக்கலாம், தலையிலும் இருக்கலாம்  கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீர்யானை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். சைக்கிள் ஓட்டிச் செல்லும் இளைஞரின் தலையில் உள்ள ஸ்கார்ப்பில் பாருங்கள். நீர்யானை பொம்மை தெரியும்.

hippo 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment