Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஜாகுவாரை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயா மாயா எல்லாம் மாயா என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது புரியாதவரைதான் புதிர். புரிந்துவிட்டால், அது ஒன்றுமே இல்லாத ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagran தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில் புலிகளுக்கு இடையே ஒரு ஜாகுவார் மறைந்திருக்கிறது. புலிகளும் ஜாகுவாரும் ஒரே பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் தோற்றத்தில் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த ஒற்றுமை உங்கள் கண்களை ஏமாற்றலாம். அதனால், புலிகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஜாகுவாரை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் புலிகளுக்கு இடையே ஜாகுவார் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் புலி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் ஜாகுவாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். உடலில் புள்ளிகள் இருப்பதைப் பாருங்கள்.
இப்போது புலிகளுக்கு இடையே ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் ஜாகுவாரைக் அடையாளம் காணவில்லை என்றால் ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“