Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் உங்களுக்கான சுவாரசியமான பொழுதுபோக்கு சவால். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஜாகுவாரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கன்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடிதான். ஏனென்றால், இந்த சவால் உங்கள் கண்களை ஏமாற்றும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விட்டாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு புதிய விலங்கை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறோம்.
காட்டு விலங்குகளில் வலிமையான விலங்கு எது என்றால், சிங்கம், புலி, யானை என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், காட்டு விலங்குகளில் ஜாகுவாரைவிட வலிமையான விலங்கு எது என்றால், அது ஜாகுவார் என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் ஜாகுவாரை மிகவும் வலிமையான விலங்கு என்று கூறுகிறார்கள்.
அதனால், ஜாகுவார்களைப் பற்றிய சில தகவல்களை உங்களுக்காக இங்கே கூறுகிறோம். அதற்கு முன், நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில், இந்த படத்தில் மறைந்திருக்கும் ஜாகுவாரை கண்டுபிடிக்க வேண்டும். தேடிப் பாருங்கள்.
பூனை குடும்பத்தில் ஜாகுவார் உலகின் மூன்றாவது பெரிய பூனை. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, ஜாகுவார் பூனை ஆகியவை பூனை குடும்பமாக குறிப்பிடப்படுகிறது. ஜாகுவார் சுமார் 170 செமீ நீளம் வரை வளரும்.
ஜாகுவாரின் உடலில் புள்ளிகளுக்குள் புள்ளிகள் இருக்கும். சிறுத்தைகளும் ஜாகுவார்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவற்றின் தோற்றத்தில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை இந்த புள்ளிகளை வைத்துதான் வேறுபடுத்துகிறார்கள். ஜாகுவார்களின் உடலில் சில ரொசெட்டுகளின் மையத்தில் சில கருப்பு புள்ளிகள் உள்ளன.
ஜாகுவார்கள் தண்ணீரில் மிகவும் வேகமாகவும் சிறப்பாகவும் நீந்தக் கூடியவை. அதனால், ஜாகுவார்கள் தண்ணீரைப் பார்த்து அச்சப்படுவதில்லை.
இந்த படம் Best Quiz யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் உள்ளது. இந்த படத்தில் மரங்களும் புதர்களும் மண்டியுள்ள இடத்தில் ஒரு ஜாகுவார் பதுங்கி இருக்கிறது. அந்த ஜாகுவார் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இந்த சவால் உங்கள் கண்களை ஏமாற்றும். பார்வையை திசை திருப்பும். கடினமானது. ஆனால், புத்திசாலித் தனமாக யோசித்தால் எளிதானது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பதுங்கி இருக்கும் ஜாகுவாரை 5 நொடிகளுக்குள் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் ஜாகுவாரை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஜாகுஆர் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் புதர்களில் கவனமாகப் பாருங்கள். ஜாகுவாரைப் பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் ஜாகுவாரை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக ஜாகுவார் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.