Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகள் மேயும் மலையில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் சிங்கம். நீங்கள் சிங்கம் என்று நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்கள் கவனத்தை வேறு ஒரு இடத்தில் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
இதைத்தான் ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. இது ஒரு டிஜிட்டல் யுகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு.
இந்த படத்தை புகைப்படக் கலைஞர் Fabio Nodari ஆல் எடுக்கப்பட்டது. இந்த படம் Caters News Agency தளத்தில் வெளியாகி உள்ளது. மலையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இந்த மலையில் ஒரு சிறுத்தை ஆடுகளை வேட்டையாட உலவுகிறது. அந்த சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால், சிறுத்தையைக் கண்டுபிடிங்க நீங்க சிங்கம்னு நிரூபியுங்கள்.
இந்த படத்தைப் பாருங்கள். இந்த புகைப்படத்தை இத்தாலிய பயண புகைப்படக்கலைஞரான ஃபேபியோ நோடாரி சீனாவின் சிச்சுவான் மாகாணத்திற்கு சென்றிருந்தபோது படம்பிடித்துள்ளார். நோதாரி கூறுகிறார், “வேட்டையாடும் இடத்தை நிகழ்நேரத்தில் பார்ப்பது, பனிச்சிறுத்தை உலாவும்போது, மறைந்துகொண்டு, அதன் இரையை வேட்டையாட முயற்சித்தபோது அதைப் பார்ப்பது என் வாழ்க்கையின் நம்பமுடியாத புகைப்பட அனுபவம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள சிறுத்தையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மண் உள்ள பகுதிகளில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கும் பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.