Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனிப்பது தொடர்பானது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட் படங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன், படங்களின் சவால்கள் நல்ல சுவாரசியமான பொழுது போக்கு புதிர் விளையாட்டாகவும் இருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மான்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்து வேட்டையாட பதுங்கி வரும் சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் ஏற்று விடையைத் தேடுபவர்கள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தலைமுடியை பிச்சிக் கொள்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளைக்கு ஒரு சிறிய பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பயிற்சியை வழக்கமாக்கிக்கொண்டால், கணிசமான நன்மைகளும் இருக்கிறது. கவனம் செலுத்துதல், விவரங்களைக் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதிக அறிவாற்றல் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் மான்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த ஒரு சிங்கம் மான்களை வேட்டையாடுவதற்காக மான்களுக்கு இடையே பதுங்கி வருகிறது. சிங்கம் மான்களை வேட்டையாடுவதற்கு முன்னர், 10 நொடிகளில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடிதான்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான்களுக்கு இடையே பதுங்கி இருக்கும் சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மான்களுக்கு பின்னால் கவனமாகப் பாருங்கள். சிங்கம் தென்படலாம்.
இப்போது நீங்கள் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“