Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தை ஒரு சூறாவளி போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தீர்த்து வருகிறார்கள். அது முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் மாயாஜாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப்போய்க் கிடக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல அவர்களை ஈர்த்து வருகிறது. நீங்களும் ஒரு முறை ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும்போது அவைகளை வேட்டையாட ஒரு சிங்கம் நுழைந்துவிட்டது. இது தெரியாமல் மான்கள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அதனால், 5 நொடிகளில் அந்த சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது ஒன்றும் பெரிய புரியாத புதிர் அல்ல. அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல. அது மிகவும் எளிமையானது. ஆனால் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேட வேண்டும். அதே நேரத்தில், அது ஒரு மாயாஜாலம். அது ஒரு தந்திரம், அது ஒரு கண்கட்டி வித்தை, அது ஒரு ஏமாற்று வேலை என்பதை மறுக்கவும் முடியாது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காட்டுப் பகுதியில் மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்போது, எப்படியோ அங்கே ஒரு சிங்கம் மான்களை வேட்டையா மான் கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. ஆனால், மான்களோ சிங்கம் வந்துவிட்டதைத் தெரியாமல் மேய்ந்துகொண்டிருக்கின்றன. சிங்கம் பாய்ந்து தாக்குதலை நடத்துதற்கு முன்னர், யாராவது ஒரு 5 நொடியில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து மான்களை அலெர்ட் பண்ணுங்க ப்ளீஸ் என்பதுதான் உங்களுக்கான சவால். ப்ளீஸ் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மான் கூட்டத்தில் புகுந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாவே ஜீனியஸ்தான். அதுமட்டுமல்ல, உங்களுக்கு கருணை மிகவும் அதிகம் என்று சொல்லலாம். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள் சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.