வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம்… எங்கே பதுங்கி இருக்கு? கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு வனப்பகுதியில் கூட்டமாக மேய்ந்திருக்கும் வரிக்குதிரைகளை வேட்டையாட ஒரு சிங்கம் வந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே பதுங்கி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடுக்கப்பட்டுள்ளது.
Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. எந்த அளவுக்கு சவாலானது என்றால் நீங்கள் வலை வீசி தேடினாலும் சிக்காது, சல்லடை போட்டு சலித்தாலும் நிக்காது. அந்த அளவுக்கு கடினமானது.
Advertisment
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவால்களை ஏற்று விடையைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பளபளக்கும் போலி கண்ணாடி வைரக் கற்களுக்கு மத்தியில் உண்மையான வைரக் கல்லைக் கண்டுபிடிப்பது போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு வனப்பகுதியில் கூட்டமாக மேய்ந்திருக்கும் வரிக்குதிரைகளை வேட்டையாட ஒரு சிங்கம் வந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே பதுங்கி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடுக்கப்பட்டுள்ளது.
கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும்போது, ரிலாக்சாக இருக்க அவர்களுக்கு உதவியாக இருப்பது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் மிகவும் எளிமையாக இருந்தாலும் உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம் மிக்கவை. அதனால், நிதானமாக, கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், எளிதில் விடையைக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் திறமையானவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் சிங்கத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிங்கம் வரிக்குதிரைகளில் இல்லை. சிங்கம் தனியாக மறைந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க படத்தை ஜூம் செய்து பாருங்கள்.
இப்போது பதுங்கியிருக்கும் சிங்கத்தை எளிதில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”