Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் உள்ள அடர்த்தியான புதரில் காட்டுக்கு அரசனான சிங்கம் மறைந்திருக்கிறது. அதை 11 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயது நெட்டிசன்களும் உற்சாகம் அடைந்து அதில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஏதோ ஒரு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வையை திசைத் திருப்பும் ஒரு மாயாஜாலம். உங்களை கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைக் கண்டுபிடித்தால் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் முட்களும் செடிகளும் நிறைந்த புதர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதரில் காட்டுக்கு அரசனான ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கெ இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புத்திசாலி.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் புத்திசாலி நீங்கள்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் பாருங்கள்.
இப்போது சிங்கம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தை அடையாளம் காணவில்லை என்றால் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.