Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே ஒரு மிளகைத் தேடுவதைப் போன்றது. இந்த படத்தில் காபி கொட்டைகளுக்கு இடையே மனித முகத்தை தேடுவதும் அப்படித்தான்.. 22 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இதைக் கண்டுபிடியுங்கள் என்று விடுகிற சவால்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருபவையாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் மிகவும் சுவாரசியமானவை. அதனால்தான், அவை நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இன்றைய வேலைப் பளு நிறைந்த நவீன உலகத்தில், மனிதர்கள் சற்று மனதை திசை திருப்பி பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகின்றன. அதனால்தான், பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகப் பார்த்து ரிலாக்ஸாகி வருகின்றனர்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மனதைக் கவரும் வகையில் மிகவும் சுவாரசியமானது. காபி கொட்டைகளுக்கு இடையே அதே நிறத்தில் ஒரு மனித முகம் மறைந்திருக்கிறது. அதை 22 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். காபி கொட்டைகளுக்கு இடையே மறைந்திருக்கும் மனித முகத்தை நீங்கள் 22 வினாடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இது கடினமானது.

காபி கொட்டை வடிவில் இருக்கும் அந்த அழகான மனித முகத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு குறிப்பு தருகிறோம். மனித முகம் இந்த படத்தில் கீழ்ப் பகுதியில் மறைந்திருக்கிறது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்று கவனித்து கண்டுபிடியுங்கள்.
உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காபி கொட்டை வடிவிலான மனித முகம் எங்கே இருக்கிறது என்று நாங்கள் கூறுகிறோம். நீங்கள் இன்னும் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”